யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு

0
12

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி, அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது – 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.வீட்டிலிருந்த போது அவர் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்தே சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்தார். நெல்லியடிப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவில் கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தனது தாயாரை நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடிப் பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்த நிலையில் அந்தக் கிணற்றை அவரது மகன் எட்டிப் பார்த்த வேளை சடலம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாகக் காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய தாயார் ஆவார்.இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here