வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
13

2024 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை 300,162 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 177,804 ஆண்களும் 122,358 பெண்களும் உள்ளடங்குவர்.

தென் கொரியாவுக்கு 7,002 பேரும், இஸ்ரேலுக்கு 9,211 பேரும், ருமேனியாவுக்கு 10,274 பேரும், ஜப்பானுக்கு 8,251 பேரும் வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 310,948 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதுதான், இவர்களில் அதிகளவானோர் ஐக்கிய அரபு அமீரகம் இராச்சியத்திற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here