கிறிஸ்தவ தேவாலயங்களில் பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு

0
5

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நாடளாவிய ரீதியிலுள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நத்தார் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தந்த காவல்துறை பகுதிகளில் உள்ள சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், உதவி காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவில் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுவார்கள்.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பேச்சாளர், தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை காவல்துறையினர் நாடுவார்கள்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் சாரதிகளை பரிசோதிக்க விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான பாதுகாப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளில் குற்றச் செயல்களைக் கண்காணித்து அடையாளம் காண்பதற்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் சிவில் உடை அணிந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here