2025 இல் அரச அலுவலகங்களில் ஏற்படப்போகும் மாற்றம்

0
97

அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் அடுத்த ஆண்டு (2025) தொடங்கும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர(Eranga Gunasekara) தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

இந்த திட்டம் நாட்டில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.அடுத்த வருடத்தில் இருந்து எமது நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம், மேலும் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தையும் ஆரம்பிக்க தயாராகி வருகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here