ஏப்ரலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்!

0
69

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு, புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் மாதம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தாலும் அந்தக் காலப் பகுதியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறுவதால் ஏப்ரல் மாதமே பொருத்தமான காலப்பகுதி என்று கருதப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here