நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி பொங்கல் தினத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் இரு குடும்பங்களு இடையில் பழைய பகை ஒன்றின் காரணமாக பொங்கல் தினத்தில் ராமர் பஜனை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சிறு வாய்த்தர்க்கம் முற்றியதில் சந்தேகநபர்கள் ஒருவரை தனியாக அழைத்துச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
சம்பவத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட 45 வயதுடைய நபர் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 6 பேரையும் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்ப்ட்ட போது இவர்கள் அனைவரையும் எதிர்வரும் (29)ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் ம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.