சிறுமியை துஷ்பிரயோகப்படுத்த முயன்ற தந்தை!

0
33

ஏறாவூரில் நண்பியின் வீட்டுக்குச் சென்ற 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் நண்பியின் தந்தையான 37 வயது நபர் கைது செய்துள்ளதுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டதிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் தாய் தந்தை சிறுமியை விட்டுச் சென்ற நிலையில், குறித்த சிறுமி சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஏறாவூரிலுள்ள சிறுவர் நன்னநடத்தை இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த சிறுமி சம்பவதினமான நேற்று அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று பாடசாலை முடிந்தும் பகல் 2.00 மணியாகியும் மீண்டும் இல்லத்துக்கு திரும்பாத நிலையில், நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அவரை தேடி பாடசாலைக்கு சென்றபோது அவர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார் .

இதனையடுத்து அவரை அந்த பகுதியில் தேடிவந்த நிலையில் அவர் அவரது நண்பியின் வீட்டுக்கு சென்றுள்ளர் என கண்டறிந்த உத்தியோகத்தர்கள் அங்கு சென்றபோது, சிறுமியின் நண்பி அவரது தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்றிள்ளதாகவும் அவரது தந்தை தனிமையில் இருந்த நிலையில் சிறுமியை வீட்டினுள் கூட்டிச் சென்று அவரை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது அதஜிகாரிகளால் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here