உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!

0
6

சந்தையில் பச்சை மிளகாயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூபா 1200 முதல் ரூபா 1400 வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மரக்கறி வியாபாரிகள், அனைத்து பகுதிகளிலும் பச்சை மிளகாயின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் மக்களின் கொள்வனவு குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்கள் வியாபார நடவடிக்கைகளும் தடையுருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.மிளகாய் விலை அதிகரிப்பால், மிளகாய் விற்பனையும் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இந்தச் சூழ்நிலைகளால், நுகர்வோரும் தாங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here