வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேரகம பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது பாணந்துறை வைத்தியசாலையின் பிரே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.