டிக்கோயா சந்தியில் பஸ் – முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் காயம்!

0
118

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதி டிக்கோயா சந்தியில், தனியார் பஸ்ஸூம் முச்சக்கர வண்டியும் மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா அன்ஃபீல்ட் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, டிக்கோயா சந்தியில் திடீரென ஒரு பக்க வீதியில் திரும்பி, நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸூடன் பின்னால் மோதியதில், முச்சக்கர வண்டி வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் பொலிஸார், விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here