பேருந்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி!

0
10

பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகையில் பயணித்த ஒருவர் பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவின் ஹும்பஸ்வலான பகுதியில் நேற்று (10) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ருவன்வெல்லவிலிருந்து தன்னோருவ நோக்கி பயணித்த பயணிகள் பேருந்திலிருந்து குறித்த நபர் கீழே விழுந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹும்பஸ்வலனை, ருவான்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மிதி பலகையில் அமர்ந்திருந்த போது, அதிலிருந்து கீழே விழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கரவனெல்லை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here