பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம், மத்திய பிரிவில் ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக சென்ற குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய சிவனு பாக்கியநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு, பத்தாம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாயொன்றிலிருந்தே நேற்றிரவு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக நேற்று காலை சென்றவர், இரவுவரை வீடு திரும்பாததால் தோட்ட மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.
குறித்த நபர் சடலமாக காணப்பட்ட நிலையில் அது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்தனர்.
சடலம், சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்