2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.
இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் நாட்டின் சனத்தொகை 14 இலட்சத்து 3 ஆயிரத்து 731 ஆல் அதிகரித்துள்ளது.
15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது.
நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் வசிக்கின்றனர். கம்பஹா மாவட்ட சனத்தொகை எண்ணிக்கை 24 லட்சத்து 33 ஆயிரத்து 685 ஆகும்.
குறைந்தளவான சனத்தொகை வாழும் மாவட்டமாக முல்லைத்தீவு விளங்குகின்றது. அங்கு சனத்தொகை எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 542 ஆகும்.
இலங்கையில் 1871 ஆம் ஆண்டிலேயே முதலாவது விஞ்ஞானரீதியிலான சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அக்கால கட்டத்தில் இலங்கையின் சனத்தொகை 2,400,380 ஆக காணப்பட்டது.
அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சனத்தொகை மதிப்பீடு இடம்பெற்றுவந்துள்ளது.
1881 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 1881 பெப்ரவரி 17 ஆம் திகதி தரவுகளுக்கமைய மொத்த சனத்தொகை 2,759, 738 ஆக காணப்பட்டுள்ளது.
கடைசியாக 2012 ஆம் ஆண்டில் குடிசன தொகை மதிப்பு இடம்பெற்றது. அதற்கமைய இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 3 லட்சத்து 29 ஆயிரத்து 439 ஆக காணப்பட்டது.
2024 டிசம்பர் 19 ஆம் திகதிவரையான தரவுகளுக்கமைய இலங்கையின் தற்போதைய சனத்தொகை 2 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 170 ஆக காணப்படுகின்றது.
2001 – 2012 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2012 – 2024 காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது. 2012 இல் சனத்தொகை வளர்ச்சி 0.7 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இம்முறை 0.5 ஆக உள்ளது.