34 பொலிஸ் பரிசோதகர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்பில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 34 தலைமை பொலிஸ் பரிசோதகர்களையும் பொலிஸ் பரிசோதகர்களையும் இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 27 தலைமை பொலிஸ் பரிசோதகர்களும் 7 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவர்.