இணையத்தில் பரவும் ஜனாதிபதி அநுரவின் போலிப் பு கைப்படம்!

0
16

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜேர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மியரும் முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டும் புகைப்படமொன்றை AI தொழில்நுட்பத்தின் மூலம் “உருவக்கேலி” செய்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இது குறித்து சமூக ஊடக பயனர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

AI யுகத்தில் எது உண்மை, எது போலி என்பதை அடையாளம் காண்பது கடினமாக இருந்தாலும், Basic fact-checking tools பயன்படுத்தி உண்மையை சரிபார்க்க வேண்டும். ஆகவே எதனையும் சமூக ஊடகங்களில் பகிர முன்னர் – Check – Double Check – Recheck – Fact Check before sharing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here