தமிழர் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0
115

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் படகு சின்னத்தில் கோட்டைக்கல்லாறு (09 ஆம் வட்டாரத்தில்) வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த த. சுதாகரன் கட்சியின் கொள்கை விதிகளுக்கு முரணாகவும், கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நேற்று (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர், மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போதே அவர் இவ்வாறு செயற்பட்டதால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் கையொப்பத்துடன் மேற்படி உறுப்பினரை தற்காலிகமாக இடை நிறுத்தி, அவர் பக்க ஏதுவான காரணங்களை சமர்ப்பிக்க கோரிய கடிதமானது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here