ஜி7 மாநாட்டிலிருந்து முன்கூட்டியே வெளியேறினார் ட்ரம்ப்!

0
102

இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடைநடுவே வெளியேறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில்,

“ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டார். ஆனால், மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு நேற்றிரவே (16) வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கனடா பயணத்தை பாதியில் முடித்துவிட்டு திரும்புவதற்கு முன்பு, ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது ,

“நான் கையெழுத்துப் போடக் கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா திரும்பும் ஜனாதிபதி ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள அவசரகால அறையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை தயாராக இருக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here