இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து – 23 பேருக்கு காயம்!

0
5

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பஸ்ஸுடன் லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (18) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தால் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து தடைபட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் எஹெலியகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here