56 வருடங்களுக்கு பின்பு பெண் குழந்தை – கோலாகல கொண்டாட்டம்!

0
14

மகிழ்ச்சி, உணர்ச்சி மற்றும் கொண்டாட்டம் ஆகிய அனைத்தும் நிறைந்த ஒரு தருணமாக, ஒரு குடும்பமானது 56 வருடங்கள் கழித்து தங்களுக்குக் கிடைத்த பெண் வாரிசை வரவேற்று இருக்கின்றனர்.

56வருடங்கள் கழித்து தங்களுடைய பெண் குழந்தை பிறந்திருப்பதை ஒரு குடும்பமே கோலாகலமாகக் கொண்டாடும் வீடியோ ஒன்று ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

மகிழ்ச்சி, உணர்ச்சி மற்றும் கொண்டாட்டம் ஆகிய அனைத்தும் நிறைந்த ஒரு தருணமாக, ஒரு குடும்பமானது 56 வருடங்கள் கழித்து தங்களுக்குக் கிடைத்த பெண் வாரிசை வரவேற்று இருக்கின்றனர்.

டெல்லியில் படம் பிடித்திருப்பதாக நம்பப்படும் அந்த வீடியோவில் பிங்க் நிற பலூன்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கார்கள் வரிசையாகச் செல்கின்றன. பலூன்கள் மட்டுமின்றி பூத்தோரணங்கள், நுழைவாயில் என அனைத்துமே பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. “எங்களுடைய குடும்பத்திற்கு 56 வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையோடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்” என்று அந்த வீடியோவின் கேப்ஷன் குறிப்பிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here