உமா ஓயா செயற்றிட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் இன்று ஆராய்வு!

0
17

உமா ஒயா செயற்றிட்டம் சார்ந்த தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக் குழுவினரால் இன்று (26) பண்டாரவளை, உடபேருவ பிரதேசத்தில் களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு,பண்டாரவளை நகர மண்டபத்தில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயம், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ லால்காந்த, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் ,பேராசிரியர் அனில் ஜயந்த, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரது பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here