முக்கிய அணுசக்தி நிலையங்கள் சேதம் – ஒப்புக்கொண்டது ஈரான்!

0
11

அமெரிக்கா, சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால், தமது முக்கிய அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக ஈரான் முதல் தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Nadans) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து,அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது.

‘ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தின.

இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

எனினும் ஈரான் அதனை மறுத்திருந்தது. இந்நிலையில், முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here