ரயில் பாதையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலையக ரயில் சேவை பாதிப்பு!

0
13

இன்று (27) காலை தெமோதர மற்றும் எல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் பெரிய பைன் மரங்கள் விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தைத் தொடங்கிய ரயிலின் சாரதி விழுந்த மரங்களை தூரத்திலிருந்து பார்த்து ரயிலை நிறுத்தியதன் மூலம் பெரும் விபத்தைத் தடுத்துள்ளதாக ரயில் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எல்ல பைன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பெரிய பைன் மரங்கள் விழுந்ததால் ரயில் பாதை தடைப்பட்டுள்ளதுடன் குறித்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here