இலங்கை வருவேன் – ஷாருக்கான் அறிவிப்பு!

0
6

இந்தியாவின் பிரபல பொலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கான் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஓகஸ்ட் இரண்டாம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் (City of Dreams Sri Lanka) இலங்கை திட்டத்தின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ளவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிடப்பட்டது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான திட்டத்தின் கீழ் இந்த சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் (City of Dreams Sri Lanka) உருவாக்கப்பட்டுள்ளது.

இது, அனைத்து வசதிகளுடன் கூடிய தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய கேசினோ ஹால், சொகுசு நுவா ஹோட்டல் வளாகம் மற்றும் ஒரு சூப்பர் ஷாப்பிங் மால் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம் தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷாப்பிங் மற்றும் MICE (கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here