குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான மாநாடு அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்று (1) நடந்தது.
இம் மாநாட்டில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், “பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் மீது எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தங்கள் கடமைகளுக்கு இணங்க, இந்த விடயத்தில் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.