இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.
மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் மிகக் குறுகிய நாட்களில், அதிக நாடுகளுக்கு அவர் மேற்கொள்வுள்ள சுற்றுப்பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
8 நாட்கள் கொண்ட இந்தச் சுற்றுப்பயணம் ஆபிரிக்க நாடான கானாவில் இன்று தொடங்குகிறது. பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடியின் முதல் கானா பயணம் இதுவாகும்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.