அவுஸ்திரேலியாவில் மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்களைக் கொண்ட குவாண்டஸ் விமான நிறுவனத்தின் தரவுத் தளத்தில் இணைய ஊடுருவல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் அண்மை ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப் பெரிய இணைய ஊடுருவல் சம்பவம் இதுவாகும்.
தனிநபர் ஒருவர் அழைப்பு நிலையத்தைக் குறிவைத்து மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவைத் தளத்தை ஊடுருவியதாகக் கூறப்படுகிறது. அதில் ஆறு மில்லியன் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் , பிறந்தநாள்கள் போன்ற தனிப்பட்ட விவரங்கள் இருந்ததாகக் குவாண்டஸ் விமான நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
சேவைத் தளத்தில் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கையைக் கண்டறிந்ததையடுத்து ஊடுருவல் பற்றி அறிந்ததாகச் சொன்ன குவாண்டஸ், உடனடியாக அதைக் கட்டுப்படுத்தியதைக் குறிப்பிட்டது.
“எவ்வளவு தரவுகள் களவாடப்பட்டது என்பது விசாரிக்கப்படுகிறது. இருப்பினும் அது பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” இதேவேளை குவாண்டஸ் விமான நிறுவனத்தின் , செயல்பாடுகளுக்கும் பாதுகாப்புக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.