‘2 வாசஸ்தலங்கள்,3 வாகனங்கள் பயன்படுத்தும் சபாநாயர்’

0
4

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டார நேற்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.

அரச செலவினங்களை குறைப்பதாக குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது முறையற்ற வகையில் செயற்படுகிறது.

சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வமான வாசஸ்தலமான மும்தாஜ் மஹாலை பயன்படுத்தாமல் லொரிஸ் தொடர்பாடி குடியிருப்பில் வசிக்கிறார்.

இந்த தொடர்மாடி குடியிருப்பில் தற்போது அவரது தனிப்பட்ட செயலாளர் வசிக்கிறார்.சபாநாயகருக்கு எவ்வாறு அரச செலவில் இரண்டு வசிப்பிடங்களை வழங்க முடியும். பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அனுமதியுடன் சபாநாயகருக்கு இரண்டு வாகனங்களும்,900 லீற்றர் எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சபாநாயகர் 3 வாகனங்களை பயன்படுத்துகிறார். சபாநாயகருக்கு எவ்வாறு இரண்டு இல்லங்களையும், அனுமதியற்ற வகையில் வாகனத்தையும் வழங்க முடியும்.

இதனூடாக மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்படுகிறது. ஆகவே இதற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here