முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்!

0
6

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த நபரிடமிருந்து முன்னாள் டிரான் அலஸூக்கு பல கொலை அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் இருந்த கால கட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள், குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அவரது உத்தரவுகள் தொடர்பாக இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here