பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.