தகவல் தர மறுக்கும் ஜனாதிபதி செயலகம்!

0
14

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊழியர் எண்ணிக்கை அதிகம் என்ற விடயம் கடந்த ஆட்சி காலம் தொட்டு பேசுபொருளாகியிருந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி செயலாளரின் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த விபரத்தை வழங்க ஜனாதிபதி செயலகம் பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது.

அனுருத்த பண்டார என்பவரால் தவகவல் அறியும் சட்டத்திற்கு அமைவாக கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு தகவல் தர முடியாதென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

குறித்த நபருக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தவலறியும் சட்டத்தின் 5 (1) (அ) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊழியர்கள் குறித்த விபரத்தை வௌியிட முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை இப்போதைய ஜனாதிபதியும் அப்போதைய எம்.பியுமான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் பெயர் விபரத்துடன் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here