ஜப்பானில் பாரிய மோசடிகள் – இலங்கையர் கைது!

0
12

ஜப்பானில் இருந்து பல இலங்கையர்களை ஏமாற்றிய இலங்கையர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை காலணிகள்

ஜப்பானில் குடியேற்ற அதிகாரிகளிடம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து சக இலங்கையர்களுக்கு சட்டவிரோதமாக வதிவிடம் பெற உதவியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதான மொஹமட் இர்பான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் மூலம் போலி ஆவணங்களை வழங்கி விசா பெற்ற 9 இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மோசடியான முறையில் விசாவை பெற்றுக்கொடுக்க பெருந்தொகை பணத்தை அவர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here