இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (8) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது இறுதியுமான ஒருநாள் போட்டியின் போது நடுவர்கள், மறைந்த ஐ.சி.சி சர்வதேச நடுவர்கள் குழுவின் உறுப்பினர் பிஸ்மில்லா ஜான் ஷின்வாரிக்கு மரியாதை செலுத்தும் விதமாக கையில் கருப்பு பட்டிகள் அணிந்திருந்தனர். மேலும் ஷின்வாரியின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.