இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட்டில் இந்தியா 1014 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த 6வது அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. அத்துடன் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த 4வது அணி (இங்கிலாந்து 1121, பாகிஸ்தான் 1078, அவுஸ்திரேலியா 1028) என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.