ஐக்கிய அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தீர்வை வரி கொள்கை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதியின் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த வரி விதிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசேட தூத்துக்குழுவுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், தொழில் மற்றறும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ.விமலேந்திர ராஜா, பொருளாதாரம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த உலங்கமுவ உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.