முக்கிய மாற்றங்களுடன் பாகிஸ்தான் T20I குழாம் அறிவிப்பு

0
10

பங்களாதேஷிற்கு எதிரான T20I தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த T20I தொடர் எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், பங்களாதேஷிற்கு எதிரான T20I தொடருக்கான சல்மான் அலி ஆகா தலைமையிலான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

காயம் காரணமாக பங்களாதேஷிற்கு எதிராக விளையாடவுள்ள T20I தொடரில் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப் மற்றும் சத்திரசிகிச்சைக்குப் பின் குணமடைந்து வரும் சகலதுறை வீரர் சதாப் கான் ஆகிய இருவரும் அணியில் இடம்பெறவில்லை.

அதேபோல, அந்த அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெறவில்லை. முன்னதாக இவர்கள் கடந்த தொடரிலும் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், காயத்தில் இருந்து மீண்டுள்ள ஃபக்கர் ஜமான், பஹீம் அஷ்ரஃப் ஆகியோர் மீண்டும் T20I அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் அஹ்மட் டேனியலிற்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அப்ரார் அஹ்மட், சுஃபியான் முகீம், மொஹமட் ஹாரிஸ், சைம் அய்யூப் உள்ளிட்டோர் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி கடந்த மே மாதம் பங்களாதே{க்கு எதிரான T20I தொடரில் ஆடியது. கடந்த ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற அந்தத் தொடரை பாகிஸ்தான் 3–0 என முழுமையாக கைப்பற்றியது.

பங்களாதேஷிற்கு எதிரான T20I தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம்

சல்மான் அலி ஆகா (தலைவர்), அப்ரார் அஹமட், அஹமட் டேனியல், ஃபக்கர் ஜமான், பஹீம் அஷ்ரஃப், ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, மொஹமட் அப்பாஸ் அப்ரிடி, மொஹமட் ஹாரிஸ், மொஹமட் நவாஸ், சாஹிப்சாதா பர்ஹான், சைம் அய்யூப், சல்மான் மிர்ஸா, சுஃபியான் முகீம்.

பாகிஸ்தான் – பங்களாதேஷ் T20I தொடர் அட்டவணை:

முதல் T20I – ஜூலை 20, டாக்கா

2-வது T20I – ஜூலை 22, டாக்கா

3-வது T20I – ஜூலை 24, டாக்கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here