ஐரோப்பா நாடுகளில் நெருப்புச் சூடு! 2,300 பேர் பலி!

0
7

ஐரோப்பா நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பேரிசில் 105 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் வீசியது. ஸ்பெயினில் 106 டிகிரிவரை வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் ஸ்பெயின் அருகே லிஸ்பனில் உள்ள மோரா நகரில் அதிகபட்சமாக 138 டிகிரிவரை வெப்பம் பதிவானது.

வெப்பத்தை சமாளிக்க இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக பிரான்சின் மெட்டியோ நகரம், ஜெர்மனியின் முனிச் ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் ஆகியவை பகுதிநேரமாகவே செயல்பட்டு வருகின்றன. நகரில் உள்ள பூங்காக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக தண்ணீர் பம்புகள், செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இளைப்பாற அனுமதிக்கப்பட்டனர்.

ஜெர்மனியில், வறட்சி மற்றும் வெப்பம் காட்டுத்தீ உருவாகி அதில் பல ஏக்கர் விளைநிலங்கள் தீயில் கருகி நாசமாகின. தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட ஐரோப்பா ஏற்கனவே சுமார் 30 டிகிரி செல்சியல்வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல், அதிகரித்து வரும் தொழில்புரட்சி, புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெப்ப அலைவீச்சு உயர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஐரோப்பா நாடுகளில் 2,300 பேர் உயிரிழந்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here