‘ஆர்மி உப்புல்’ என்பவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படும் நபர் களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொலை தொடர்பான விசாரணைகளின் போது,குறித்த சந்தேக நபர் 50 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதான சந்தேக நபர் பட்டுவத்த பகுதியைச் சேர்ந்தவர்.
கடந்த ஜூலை 3 ஆம் திகதி ,ராகமை, பட்டுவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
‘கணேமுல்லே சஞ்சீவ’வின் சகா என கூறப்படும் ‘ஆர்மி உப்புல்’ என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் ஜூலை 8 ஆம் திகதி களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டனர், அவர்கள் 9 கிலோகிராம் ஹெராயின், 67 கிலோகிராம் கேரள கஞ்சா, இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தனர் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.