உக்ரைன்-ரஷ்யா மோதலைத் தீர்க்க ரஷ்யா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நிபந்தனையின்றி ஆதவளிக்க வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வட கொரியாவிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார், அங்கு இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த விடயத்தை வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு இராணுவ ஆதரவை வழங்குவதாகவும் வட கொரிய அதிபர் கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைன்-ரஷ்யப் போருக்கு வட கொரியா, ரஷ்யாவிற்கு அனுப்பிய துருப்புக்களுக்காக ரஷ்யா நன்றி தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.