அகமதாபாத் விமான விபத்தில் தப்பியவருக்கு மனநல சிகிச்சை!

0
7

ஏர் இந்​தியா விமான விபத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பிய விஸ்​வாஸ் குமார் இன்​னும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள முடி​யாமல் தவிக்​கிறார்.

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் இருந்து ஜூன் 12-ம் திகதி லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் விமானப் பயணி​கள், ஊழியர்​கள் 241 பேர் உயி​ரிழந்​தனர்.

அத்​துடன் விமானம் மருத்​துவ கல்​லூரி விடுதி மீது விழுந்​த​தில் அங்​கிருந்த முதுகலை மாணவர்​கள் உட்பட 19 பேர் இறந்​தனர். இந்த விபத்​தில் விமானத்​தில் 11ஏ இருக்​கை​யில் பயணித்த விஸ்​வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி மட்​டும் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பி​னார். அவருடைய சகோ​தரர் விமான விபத்​தில் உயி​ரிழந்​தார்.

விபத்​தில் காயம் அடைந்த விஸ்​வாஸ், அகம​தா​பாத் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றார். அவரை பிரதமர் மோடி சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். பிரிட்​டனில் வசிக்​கும் விஸ்​வாஸ், இந்​திய வம்​சாவளியை சேர்ந்​தவர். அவருடைய குடும்​பத்​தினர் டாமன் அண்ட் டையு தீவில் கடலோர நகர​மாக உள்ள டையு​வில் வசிக்​கின்​றனர்.

அவர்​களை சந்​திக்க இந்​தியா வந்​துள்​ளார் விஸ்​வாஸ். சில நாட்​கள் குடும்​பத்​துடன் இருந்து விட்டு லண்​டன் திரும்​பும் போது​தான் விபத்​தில் சிக்​கி​யுள்​ளார். ஆனால், விமான விபத்​தின் அதிர்ச்​சி​யில் இருந்து அவரால் மீள முடி​யாமல் தவிக்​கிறார்.

இதுகுறித்து விஸ்​வாஸ் குமாரின் உறவினர் ஒரு​வர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விமான விபத்​துக்​குப் பிறகு உறவினர்​கள் பலர் மற்​றும் லண்​டனில் இருந்து பலர் தொலைபேசி​யில் அழைத்து விஸ்​வாஸ் எப்​படி இருக்​கிறார் என்று கேட்​கின்​றனர். ஆனால், அவர் யாரிட​மும் பேசுவ​தில்​லை.

விமான விபத்​தில் இருந்து தப்​பியது, அவரது சகோ​தரர் உயி​ரிழந்​தது, விபத்து நடந்த இடத்​தில் அவர் கண்ட காட்​சிகள் என பலவும் அவரை பெரி​தாக பாதித்​துள்​ளது. அதனால் அவர் நள்​ளிர​வில் திடீரென தூக்​கத்​தில் இருந்து எழுந்து கொள்​கிறார். அதன்​பிறகு மன அழுத்​தத்​தால் அவர் தூங்க முடி​யாமல் தவிக்​கிறார்.

எனவே, கடந்த 2 நாட்​களுக்கு முன்​னர்​தான் விஸ்​வாஸை மனநல மருத்​து​வரிடம் அழைத்து சென்​றோம். சகோ​தரர் உயி​ரிழந்த சோகத்​தில் இருந்து அவரால் மீள முடிய​வில்​லை. அந்த அதிர்ச்​சி​யில் இருந்து அவரை எப்​படி​யா​வது மீட்டு வர வேண்​டும் என்று முயற்​சிக்​கிறோம். லண்​டன் திரும்பி செல்​வது பற்றி அவர் இன்​னும் எந்த முடி​வும் எடுக்​க​வில்​லை. இப்​போது​தான்​ மனநல சிகிச்சை தொடங்​கி உள்​ளது. இவ்​வாறு விஸ்​வாஸின்​ உற​வினர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here