உக்குவளை அல்மினா ஆரம்ப பாடசாலையின் சிறுவர் பூங்கா இப்பாடசாலையின் அதிபர் திருமதி எப். நிரோசியாவால் இப்பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக உக்குவளை பிரதேச சபை உதவித் தலைவர் எஸ்.எம்.ராபி கலந்து கொண்டதுடன் பாடசாலை பிரதி அதிபர் , அஜ்மீர் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
அஜ்மீர் பழைய(1997) மாணவர் சங்கமும் அல்மினா ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி சங்கமும் இணைந்து சிறுவர் பூங்காவை புனரமைப்பு செய்து கொடுத்திருந்தது