சிவப்பு எச்சரிக்கை!

0
42

புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மற்றும் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசவுள்ளதால், வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் 60–70 கிமீ மணிக்கு உயரக்கூடும். கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது, மேலும் அலைகள் 2.5 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த கடலோர பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கும் கடற்சார் சமூகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை உள்ள கடற்பகுதிகளில் அவதானத்துடன் செயற்பட திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here