வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும். தற்போது, இந்த அனுமதி பத்திரத்திற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை காரணமாக நேரமும் செலவுகளும் வீணாகின்றன என்று எதிர்மறையான கருத்துகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது.