மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (20) காலை முதல் இந்த வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள வான்கதவுகள் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்குக் கீழே உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் செயிண்ட் கிளேர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவும் அதிகரித்துள்ளது.