தலவாக்கலை பகுதியில், அட்டன் இருந்து சென்கிளேயர் வரை செல்லும் 33,000 வொட் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியின் மீது மரம் முறிந்து விழுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மையத்தின் மின்சார கண்காணிப்பாளர் நிமல் சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுகளில் கடும் மழை மற்றும் காற்று வீசி வருவதால் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மரத்தை வெட்டி அகற்றி சேதமடைந்த மின்சார உள்கட்டமைப்பை மீட்டெடுக்கும் முயற்சியும் மழையால் தடைப்பட்டுள்ளது.
டெவோன் பகுதி மற்றும் பத்தனை ஸ்ரீபாத கல்வி நிறுவனம் உட்பட பல பகுதிகளை மின்சாரம் இல்லாமல் செய்துள்ளது என சமரகோன் தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் சீரானதும் மீன் சாரத்தை வழமைக்கு கொண்டுவர அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.