பதக்க வீரர்கள் இருவருக்கும் மலையகத்தில் வரவேற்பு!

0
7

சிங்கப்பூர் சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்காக 5 பதக்கங்களை வென்ற இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 பதக்கங்களை வென்ற துரைசாமி விஜிந்த் மற்றும் மணிவேல் சத்தியசீலன் ஆகிய இரண்டு விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஹட்டன், குடகமாவில் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தால் பாராட்டு விழா, திங்கட்கிழமை (21) நடைபெற்றது.

12 நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மூத்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட மூன்று நாள் போட்டியை சிங்கப்பூர் சீனியர் தடகள சங்கம் ஏற்பாடு செய்தது.

கொத்மலை, பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தைச் சேர்ந்த துரைசாமி விஜிந்த்,  சுத்தி  எறிதல், வட்டு எறிதல் மற்றும் 5,000 மீட்டர் பந்தய நடைப்பயணத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.

அதேபோல், ராகலையைச் சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் 5,000 மீட்டர் பந்தய நடைப்பயணத்தில் தங்கப் பதக்கத்தையும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இரண்டு விளையாட்டு வீரர்களும் பெருந்தோட்டத் துறையில் பிறந்தவர்கள் என்பதால், இரண்டு விளையாட்டு வீரர்களும்    ஹட்டன் குடகம பகுதியில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியபோது, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளரும் அகில இலங்கை இந்து மகா சபையின் தலைவருமான வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர சர்மா அவர்களால் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருந்தோட்டத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here