இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஒரு பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரன் உலக சாதனை படைத்துள்ளார்.
முத்தையா முரளிதரன் 1992ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இலங்கை அணிக்காக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 67 முறை 5 விக்கெட்டுகளையும் 22 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இவர் இந்திய அணிக்கெதிராக 105 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கெதிராக 112 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளதுடன் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.