இலங்கை தொழிலாளர் காங்கிரசால் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் குறித்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மக்களின் பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தீர்த்து முன் வைக்குமாறு இதன்போது கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தவிசாளர் ராஜதுரை, சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் மேற்பார்வை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.