ஹற்றன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் D.P. Education IT Campus கணினிப் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் இந்த கணினி பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹற்றன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் 2025ஆண்டுக்கான இரண்டாம் பிரிவிற்கான புதிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வும் கணனி பிரிவு திறப்பு விழாவும் நேற்று ( 23) இடம்பெற்றது.
சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட D.P. Education IT Campus கணினிப் பிரிவைபிரதியமைச்சர் பிரதீப் திறந்து வைத்தார்.
குறித்த கணினிப் பிரிவின் மூலம் மலையக மாணவர்கள் நவீன தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை முழுமையாக மேற் கொள்ள முடியும் எனவும் இதன்மூலம் மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள முடியும் எனவும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி பி.பி.சிவபிரகாசம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் முகாமையாளர் ஏ.கேப்ரியல், டி.பி. கல்வி நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் சந்துனிக்கா வனிகசேகர மற்றும் பணிப்பாளர் அமில இந்திக்க, மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.