முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கனடாவின் அரினா அர்செனால்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-2, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் கார்சன் பிரான்ஸ்டைனை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.