வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் அசோக வனம் அனுஸ்ரீ தியான மண்டப திறப்பு விழா நாளை (03) திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதனை முன்னின்று வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி நேற்று நுவரெலியா பிரதேச சபை ஊடாக ஆலய வளவுகளில் உள்ள குப்பைகளை அகற்றம் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் நுவரெலியா பிரதேச சபை ஊடாக குறித்த வேலைத்திட்டம் நுவரெலியா நகரில் பல இடங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறதும் குறிப்பிடத்தக்கது .